06 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை கடத்திய நபர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Court
Dhushanthini K
1 year ago
06 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை கடத்திய நபர் கைது!

சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அங்கு சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 750,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்பதுடன், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள 'கெசல்வத்த தினுக' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் சீடன் எனத் தெரியவந்துள்ளது. 

வெளிநாட்டுக் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேக நபர் போதைப் பொருள்களை கொண்டுச் சென்றதாக கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (11.04) மாளிகாகந்த இலக்கம் 2 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!