புத்தாண்டு சுப சீட்டுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாரம்பரிய முறைப்படி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப சீட்டுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு இன்று (10.04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுப குழுவினால் தயாரிக்கப்பட்ட சரியான சுபச் சீட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் புத்தசாசன ஆசனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.



