முள்ளியவளையில் மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
1 year ago
முள்ளியவளையில் மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

 இந்த சம்பவம் நேற்று 09.04.2024 அன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

images/content-image/2024/04/1712735360.jpg

 இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது 17 அகவையுடைய மற்றும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!