விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய தபால் ஊழியர்கள் இணக்கம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய தபால் ஊழியர்கள் இணக்கம்!

ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளாக இருந்தாலும் தபால் ஊழியர்கள் அன்றைய தினம் தமது கடமைகளை செய்வதற்கு இணங்கியுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.  

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனை பாரிய அளவிலான பொருட்களை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அஞ்சல் துறைக்கும், மத்திய தபால் பரிவர்த்தனைக்கும் வரலாற்றில் அதிக அளவில் பொருட்கள் கிடைத்த ஆண்டு இந்த ஆண்டு.

வெளி நாடுகளில் உள்ளவர்கள் நம் நாட்டில் உள்ள உறவினர்களுக்கு அதிக அளவில் பொருட்களை பார்சல்களாக அனுப்பியுள்ளனர்.அந்த பொருட்களை அனுப்புவது நமது பொறுப்பு. உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு அதனை கொண்டு சேர்க்க வேண்டும். 

இந்நிலையில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அறிவுரைப்படி அனைவரும் வரும் 12ம் திகதி  பணியில் சேர முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!