நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பலர் கைது!

#SriLanka #Arrest #Police
Mayoorikka
1 year ago
நாடளாவிய  ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பலர் கைது!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வெள்ளவத்தை, மீட்டியகொட, கெசல்வத்தை, ரத்கம, கல்கிஸ்ஸ மற்றும் அங்கொட ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 8 பேரையும், அவர்களுடன் பல்வேறு உறவுகளைக் கொண்டு குற்றங்களுக்கு ஆதரவாக இருந்த 8 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!