தேசிய கண் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
#SriLanka
#Hospital
#doctor
#Eye
#Research
#firecracker
Prasu
1 year ago

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் 17 சதவீதம் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என தேசிய கண் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கண் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்கச் சிறுவர்கள் எப்போதும் பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பட்டாசு வெடிக்கும் போது தீ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறும், தீ காயங்களுக்கு கை மருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .



