வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் சடலம் மீட்பு
#SriLanka
#Vavuniya
#Death
Mayoorikka
1 year ago
வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
