மனிதர்கள் செல்வச் செழிப்பையடைய லட்சுமி, குபேரர் மந்திரங்கள நாள் தோறும் கூற வேண்டும்

#spiritual
Mugunthan Mugunthan
11 months ago
மனிதர்கள் செல்வச் செழிப்பையடைய லட்சுமி, குபேரர் மந்திரங்கள நாள் தோறும் கூற வேண்டும்

மனிதர்களாகிய நாம் செல்வச் செழிப்பை அடைய அஷ்ட லட்சுமிகளை வணங்குதல் வேண்டும்.

 லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் உச்சரித்தல் அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும்.

 இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.

 மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

 மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். 

இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.

 ஓம் அகத்தீசாய நம!

 ஓம் கரூவூர்தேவாய நம!

 ஓம் போகதேவாய நம!

 ஓம் கோரக்கதேவாய நம!

 அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். 

இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாகவும்  நன்மைகள் கிடைக்கின்றன.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!