இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக அதிகரிப்பு!

#SriLanka #Central Bank #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக அதிகரிப்பு!

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என நிதியமைச்சு பரிந்துரை செய்த போதிலும் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மாத்திரம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிச் சபையின் உறுப்பினர்களுக்கு  சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  மத்திய வங்கியின் சில பிரதி ஆளுநர்களின் சம்பளம் 712,179 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

இதன்படி இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஒருவர் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் சகல கொடுப்பனவுகளுடன் 16,87,144.56  மாதாந்த சம்பளத்தைப் பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

 அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர், சிரேஷ்ட அதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் போன்ற பல பதவிகளின் சம்பளம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 

 முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் பதவியில் முதல் தர ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 34,235 ரூபாவாகும். சகல கொடுப்பனவுகளுடன் அந்தப் பதவிக்குக் கிடைத்த மாதச் சம்பளம் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 76 ரூபாவாகும். 

ஆனால் புதிய சம்பள உயர்வின்படி, பதவியின் அடிப்படை சம்பளம் 55,805 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அனைத்து கொடுப்பனவுகளுடன், அந்த பதவியில் இருக்கும் ஒரு ஊழியரின் மாத சம்பளம் 183,388 ஆகும். 

முகாமையாளர் உதவியாளர் தரம் I ஊழியர்களின் சம்பளம் அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து 62,797 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய அடிப்படை சம்பளம் 57035 ரூபாய். புதிய சம்பள உயர்வு மூலம், அவர்கள் இப்போது  235,035 மாத சம்பளம் பெறுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!