யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை!
#SriLanka
#Jaffna
#land
#Divisional Secretariat
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் , தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து , காணி விடுவிப்புக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும்.
அதனை அடுத்து காணிகளை விடுத்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.



