மன்னாரில் அரியவகை ஆமைகளுடன் மூவர் கைது!

#SriLanka #Mannar #Arrest #Tamilnews #sri lanka tamil news #turtle
Dhushanthini K
1 year ago
மன்னாரில் அரியவகை ஆமைகளுடன் மூவர் கைது!

மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை பிடித்து மீன்பிடி படகில் வீட்டிற்கு கொண்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

மன்னார் வளைகுடா பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்று அவதானிக்கப்பட்டதுடன், கப்பலில் உயிருடன் இருந்த அரிய வகை ஆமை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பின்னர், குறித்த மீன்பிடிக் கப்பல் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் சந்தேகத்திற்குரிய மூன்று மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன், இது தொடர்பில் மன்னார் வனஜீவராசிகள் அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பின்னர், ஸ்தலத்திற்கு வந்த மன்னார் வனவிலங்கு அதிகாரிகள் ஆமையை பாதுகாப்பாக கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இவ்வாறாக பிடிக்கப்படும்  அரிய வகை ஆமைகளை  அதிக விலைக்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு விற்கும் மோசடியில் பலர் ஈடுபடுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!