மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவுகள் குறித்து ஆராய ஒன்றுக்கூடும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!
#SriLanka
#Electricity Bill
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவுகள் குறித்து ஆலோசிக்க அடுத்த வாரம் கூடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்கட்டண திருத்த மசோதா மீதான பொதுமக்களின் கருத்துக்கள் பெறுவது வரும் 23-ம் திகதிதொடங்க உள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 21 நாட்கள் பொதுமக்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்த யோசனை இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.



