உகண்டா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அலி சப்ரி!
#SriLanka
#Ali Sabri
#Lanka4
#Uganda
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
உகண்டா - கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒடோங்கோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் மற்றும் மாலைதீவு, அல்ஜீரியா, கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல்கள் மூலம் புதிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.