யாழ்ப்பாணத்தில் இரவு பத்து மணிவரை விசேட தேடுதல் நடவடிக்கை!

#SriLanka #Jaffna #Arrest #Police #Crime #drugs #Lanka4
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்தில்  இரவு பத்து மணிவரை விசேட தேடுதல் நடவடிக்கை!

நாட்டில் போதை ப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நாடு பூராகவும் 6.00 மணி தொடக்கம் இரவு10.00 மணிவரை பயணிகள் பேருந்துகள் பொலிஸாரால் மோப்பநாயின் உதவுயுடன்பரிசோதிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் யாழ். வரவேற்பு வளைவு அமைந்துள்ள செம்மணி சந்திப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளும் சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்றது.

 யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அனும்பமால் தலைமையிலான போக்குவரத்து பொலிஸாரால் பேருந்துகளில் பயணிப்போரின் உடைமைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு பேருந்துகளும் முழுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

 குறித்த பரிசோதனையின் போது மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!