யாழ்ப்பாணத்தில் 14 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

#SriLanka #Jaffna #Lanka4 #shop #Bussinessman #Shopping
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்தில் 14 ஆவது  சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. 

 கண்காட்சியில் சிறந்த தொழில் முயற்சியில் ஈடுபடும் மூதலிட்டாளர்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையிலான கண்காட்சியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. 

சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இம்முறை 64 ஆயிரம் பேர் கொண்ட பார்வையாளர்களாக வருவதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 350 காட்சிக் கூடாரங்கள் காணப்படுகின்றன. 

images/content-image/2023/1705660470.jpg

இவற்றில் கட்டட துறை பகுதி, தொழில்நுட்ப பகுதிகள், கணணியல் துறை பகுதிகள், உள்ளூர் உற்பத்தி காட்சிக் கூடாரங்கள், வெளிநாட்டு கல்வியியற் பிரிவுகள், தனியார், அரச, கல்வியியற் காட்சிக் கூடங்கள், வாகன விற்பனை சந்தைகள், சிற்றுண்டி வகைகள், மின்னியல் சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருள்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 மேலும் சிறு முயற்சியாளர்களுக்கு 10 இலவசமாக கூடாரங்களும், தொழில்முனைவோர்களுக்கும் 10 இலவசமாக கூடாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. 

சிறிய முதலீட்;டை கொண்டுள்ளவர்களுக்கு முன்னுரை அடிப்படையில் இவை வழங்கப்பட்டுள்ளன இந்த பிரதேசத்தில் சிறந்தமூதலீட்டினை ஊக்குவிப்பதை ஓர் இலக்காகக் கொண்டு 14 ஆவது ஆண்டு வர்த்தக் கண்காட்சி விளங்குகின்றது. இம்முறை 2000 பேர் அளவிலான தென்னிலங்கை முதலீட்டாளர்களும் இங்கு வந்து தமது சந்தைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

images/content-image/2023/01/1705660514.jpg

இந்த வர்த்தக கண்காட்சி 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல்‌ இரவு 8 மணி வரையில் நடைபெறவுள்ளது.

 ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!