இலங்கை முழுவது ஒரே நாளில் 963 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (19) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 963 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 638 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 325 சந்தேக நபர்களும் இதில் அடங்குவர்.
மேலும், பின்வரும் அளவு போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 300 கிராம் ஹெரோய்ன் 172 கிராம் ஐஸ் 530 கிராம் கஞ்சா 99,209 கஞ்சா செடிகள் மாவா 336 கிராம் மதன மோதகம் 314 கிராம் 24,083 மாத்திரைகள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 10 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைக்கு அடிமையான 08 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 25 சந்தேக நபர்களும் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.