தமிழரசுக்கட்சியின் தலைவராக சுமந்திரன் வந்தால் பாதிப்பு! யோகேஸ்வரன்

#SriLanka #M. A. Sumanthiran #Jaffna #Batticaloa #Lanka4 #TNA #pressmeet
Mayoorikka
1 year ago
தமிழரசுக்கட்சியின் தலைவராக சுமந்திரன் வந்தால்  பாதிப்பு!  யோகேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

 இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்து நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. 

இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும். 

ஏன் ஏன்றால் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். தமிழ் தேசியத்தினை பாதுகாக்க வேண்டும். 

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியிட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்து. இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறிதரன் அவர்களை ஆதரிப்பதாக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர். நான் வேட்பாளராக இருந்தாலும் எனது வாக்கினையும் அளிப்பேன். தமிழ் தேசியம் பாதுகாக்கும் வரை இறுதி வரை இருப்பேன். 

வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழ் தேசியத்தினை பாதுகாக்காக பொருத்தமான தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம் அவர்களே ஆகும். எல்லோருக்கும் தெரியும் சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த நாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் அவர்கள் செல்லும் போது அவருக்கு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து ஏதிராக கோசங்கள் எழுப்பபட்டன.

 நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதியதலைவராக வந்தால் அது தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும். பொதுச்சபை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஆதரிக்கும் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் வேறு விதமாக தேர்தல் நடக்குமா என்பது ஏதிர்வரும் 21.01.2024 அன்று தெரியவரும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!