அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) உரையாற்றவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18.01) பிற்பகல் உகண்டாவின் கம்பாலா நகருக்கு சென்றிருந்தார்.
அங்கு ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.