19ஆவது அரச தலைவர் மாநாட்டில் பங்குபற்றவுள்ள ரணில்!
உகண்டாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்களுக்கான மாநாட்டில் இன்று பங்கேற்கவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்களுக்கான மாநாடு, “உலகளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் இன்றும் நாளையும் உகண்டாவில் இடம்பெறவுள்ளது.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அதனையடுத்து, G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த இரு மாநாடுகளிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்ற உள்ளதுடன், ஆபிரிக்க வலயத்தின் உலக தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.