நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பதற்றம்; அதிரடிப்படையினர் குவிப்பு

#SriLanka #Colombo #Death #Police #Attack #GunShoot
Mayoorikka
1 year ago
நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பதற்றம்; அதிரடிப்படையினர்  குவிப்பு

குருணாகல்நாரம்மல பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இதனையடுத்து நாரம்மல மக்கள் குறித்த பொலிஸை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தினர்பொலிஸ் நிலைய வாயில்களை உடைத்து, பொலிஸாரின் உடைமைகளை சேதப்படுத்தினர்.

 இதையடுத்து, இதன்படி, நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்றை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் நாரம்மல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​சிறிய லொறி ஒன்றை நாரம்மல நகருக்கு அருகில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது, 

எனினும் அந்த உத்தரவை மீறி வாகனம் செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து, குறித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற பொலிஸார் தம்பலாஸ்ஸ சந்திக்கு அருகில் நிறுத்தி சோதனையிட்டனர்.

 அப்போது, பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் சாரதி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அலவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!