ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள கோரிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Election Commission
#Sri LankaElection
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம்திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையின்படி, பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.