மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவை விற்பனை செய்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!
#SriLanka
#Court Order
#Food
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ”லம்ரைஸ்” உணவை விற்பனை செய்த உணவகத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த உணவகத்தில் பணியாற்றும், ஒன்பது பணிப்பாளர்களுக்கும் 180,000 ரூபா அபராதம் செலுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகளை பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த உணவில் பாக்டீரிய கழிவுகள் இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம் குறித்த நிறுவனத்திற்கு உரிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.