மோசடிக்காரரை பாதுகாக்கும் முதுகெலும்பு இல்லாத அரசாங்கமே இது!

#SriLanka #Election #Sajith Premadasa #Ranil wickremesinghe #Lanka4 #srilankan politics #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
மோசடிக்காரரை பாதுகாக்கும் முதுகெலும்பு இல்லாத அரசாங்கமே இது!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில் மோசடி செய்துள்ளனர்.

images/content-image/1705555166.jpg

ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திருடும் போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்துக் கொண்டே வருகின்றதுடன் மோசடியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள்.

மேலும் வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு.இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிலும் திருட்டுக்கு தண்டனை வழங்கப்படும் போது வங்குரோத்தான நாட்டில் மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு திருட்டு கடத்தல் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!