யாழில் பட்டத்துடன் (காற்றாடி) பறந்து சென்ற இளைஞர்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ் - வல்வெட்டி துறையில் அண்மையில் இடம்பெற்ற பட்டத்திருவிழா அனைவரையும் கவர்ந்திருக்கும்.
ஆனால் இந்த படத்திருவிழாவில் சில இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களையும் செய்திருப்பதாக அறியமுடிகிறது.
இதன்படி யாழ்ப்பாணம் - தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றின் கயிறை பயன்படுத்தி 30 அடிவரை பறந்து சென்று செல்பி எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டம் ஒன்றை பறக்கவிட்டு அந்த படத்தில் பறந்து சென்ற இளைஞர் ஒருவர் 100 அடி உயரத்தில் சிக்கிக்கொண்டது நினைவிருக்கலாம்.