இலங்கையில் மரக்கறி விலைக்கு என்ன காரணம்?
இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் அண்மைக்காலமாக உச்சம் தொட்ட நிலையில் உள்ளன.
பண்டிகைக் காலத்தின் பின்னர் மரக்கறிகளின் விலை குறைவடையும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் விலைகள் இன்னும் உயர்வாகவே காணப்படுகின்றன.
காய்கறி வகைகளின் விலை இப்போது ஒரு கிலோகிராம் ரூ.1,000ஆக இருப்பதுடன், கரட் மற்றும் பீன்ஸ் அதிகபட்ச அளவை எட்டி கிலோ ரூ.1,200 ஆக பதிவாகியுள்ளது. அனைத்து காய்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்து, நிதி சவால்களை உருவாக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரக்கறிகளின் விலை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளமைக்கு மழை காரணமாக மரக்கறி செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இடைத்தரகர்களின் செயற்பாடே விலை அதிகரிப்புக்கு காரணம் என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் இவ்வாண்டு வரி அதிகரித்ததன் காரணமாகவும் மரக்கறிகள் விலைகள் அதிகரித்தமைக்கு பிரதான காரணமாக அமைகின்றதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.