முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன்
#SriLanka
#children
#Attack
#Missing
#lanka4Media
#lanka4.com
#crocodile
Prasu
1 year ago
நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர், கடுவலை - வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.