ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு தானும் தகுதியானவன் என்கிறார் குமார வெல்கம!
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிற்க தானும் தகுதியானவன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர்.
எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் ஜனாதிபதி தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை.
ஆனால் ஒரு நட்சத்திரம் உள்ளது. டை கோட் அணிந்து வருபவர்கள் யாரும் வரமாட்டார்கள். வருபவர்கள் பின்னால் தான் வருவார்கள்.

பொருளாதார நெருக்கடி என்று சொல்லிச் சொல்லியே குடும்பத்துடன் நாட்டை விட்டு செல்கிறார்கள்.
செல்வதும் ஃபெஸ்ட் க்ளாஸ் தான். நல்ல ஹோட்டல்களுக்குத்தான் செல்கிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும்.
என்ன பொருளாதார நெருக்கடி வந்தாலும் தேர்தல் நடத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நல்லது கெட்டது இரண்டும் உண்டு.
எனினும் மக்கள் தரப்பில் அவர்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.