ரணிலுக்கு சஜித் பெரும் போட்டியாக இருப்பார்! திஸ்ஸ கருத்து
#SriLanka
#Sri Lanka President
#Election
#Ranil wickremesinghe
#Lanka4
#Thissa Attanayake
Mayoorikka
1 year ago
தனது கட்சி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைக் கையாள்வதற்கான குழுவை நியமித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
“ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு எமது எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது மற்ற கட்சிகளுடன் கலந்துரையாட ஒரு குழுவை நியமிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய போட்டியாக இருப்பார் என நம்புகின்றோம் ” என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.