வடமாகாணத்திற்கு IMF குழுவினர் விஜயம்!

#SriLanka #NorthernProvince #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
1 year ago
வடமாகாணத்திற்கு IMF குழுவினர் விஜயம்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவொன்று வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸைச் சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடமாகாணத்தின் தற்போதைய மக்களின் வாழ்க்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

வடமாகாணத்தில் வாழும் மக்களின் பொருளாதார வலுவூட்டல், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு அமுல்படுத்தக் கூடிய முன்மொழிவுகள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியில் வலுவூட்டும் வகையில் அரசாங்கம் தற்போது திட்டமிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!