பசியை போக்க பாக்கு பிடுங்கியவர் மரணம்

#SriLanka #Lanka4 #Hungary
Mayoorikka
1 year ago
பசியை போக்க பாக்கு பிடுங்கியவர் மரணம்

இரண்டு நாட்களாக எவ்விதமான உணவும் உட்கொள்ளாது பட்டினியால் வாடிய நபரொருவர், மற்றொருவருக்குச் சொந்தமான பாக்கு மரத்திலேறி, பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.

 கடுகண்ணாவை- கம்பளை வீதியில் நாவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனோகரன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர், திருமணமாகாதவர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

 நாவுல்ல பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து. பாக்கு மரத்தில் ஏறிகொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. 

சடலம் பிரேத பரிசோதனைக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி. ஜெயசூரிய சடலத்தின் தடயவியல் பரிசோதனையின் போது உயிரிழந்தவர் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!