தைத்திருநாள் : தலைவர்களின் வாழ்த்துச் செய்தி!
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று (15.01) தைத்திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
உழவர்களின் திருநாளான இன்று சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பொங்கலிட்டு பிராத்தனை செய்வர்.
இந்நிலையில் இந்துக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,கருவுறுதலையும் நன்றியுணர்வையும் குறிக்கும் தைப் பொங்கல் பண்டிகை அறுவடை மட்டுமல்ல, புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும்.
இரண்டு வருடங்களாக ஆற்றிய வரம்பற்ற அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு நாடு வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தைப் பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதத்தைப் பெற்று, முதலிடத்தைப் பெறுவதற்கான புதிய பயணத்தில் இணையுமாறு உலகிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.