அனைவருக்கும் lanka4 இன் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
#SriLanka
#Festival
#Lifestyle
#Pongal
#Lanka4
#wishes
Mayoorikka
1 year ago
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம்.
நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள்.
இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை எடுத்துக் காட்டுகின்றது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான நாளில் lanka4 இணையத்தள வாசகர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.