களுகுகா ஆற்றில் நீராடச் சென்ற 03 மாணவிகள் நீரில் மூழ்கி பலி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #School Student
Thamilini
1 year ago
களுகுகா ஆற்றில் நீராடச் சென்ற 03 மாணவிகள் நீரில் மூழ்கி பலி!

களுத்துறையில் நீரில் மூழ்கி 15 மற்றும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அங்கு நீராடச் சென்ற போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

 களுத்துறை கல்லூரிக்கு முன்பாக உள்ள களுகுகா ஆற்றில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

களுத்துறை பன்வில பகுதியைச் சேர்ந்த இவாங்கி மதுஹாஷினி, தொடங்கொட நவிலியாவத்தை பகுதியைச் சேர்ந்த கிவிந்து சத்சர மற்றும் தொடங்கொட ரதுகுருசாவைச் சேர்ந்த சுபானி சுபேஷலா என்ற மூன்று பாடசாலை மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இரு மாணவர்களும் இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தமையும் தெரியவந்துள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!