இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (15.01) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 30-40.கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.