ஹவுதிகளின் தாக்குதல்களை முறியடிக்க தயார் நிலையில் உள்ள இலங்கையின் கப்பல்கள்!
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Ship
#RedSea
#lanka4Media
#lanka4_news
Thamilini
1 year ago
செங்கடலில் ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு - கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கப்பல்கள் புறப்படும் திகதி இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஒரு கப்பலில் கிட்டத்தட்ட நூறு மாலுமிகள் பணிபுரிவதுடன், கப்பல்களில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
. கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற "ஷில்பா அபிமானி 2023" ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் செங்கடலுக்கு அனுப்பப்படும் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.