வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

#India #SriLanka #Arrest #Fisherman #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிலாடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த வடக்கு கடற்படை கட்டளை, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!