சிறீமாவோ பண்டார நாயக்காவுக்கும் மகள் சந்திரிக்காவுக்கும் ஏற்பட்ட பனிப்போர் ஏன் தெரியுமா?
1977இல் நடைபெற்ற தேர்தல் சிறிமாவுக்கு பலத்த அடியாக விழுந்தது. புதிய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிறிமாவின் குடியுரிமை உட்பட பல சலுகைகள் பறிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முடக்கி வைக்கப்பட்டார்.
1986 இல் மீண்டும் குடியுரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமைகள் கிடைத்தவுடன் 1989 தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற திருமதி பண்டாரநாயக்க, 1994 இல் தன்னுடைய மகள் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
இக்காலகட்டத்தில் சுதந்திர கட்சியின் உண்மையான தலைமை யார் என்பதான கடும் பனிப்போர் தாய்-மகள் உறவுக்குள் இருந்ததாக பேசப்பட்டது. தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சிறிமா 2000ஆம் ஆண்டு அக்டொபர் 10 இல் பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் மாரடைப்பால் உயிர் துறந்தார்.