காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு - சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு - சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சீமெந்து தொழிற்சலையில் கும்பல் ஒன்று இரும்பு திருட்டில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!