மன்னாரில் அதானி நிறுவனத்தின் காற்றலை மின் உற்பத்தி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்! டக்ளஸ்
மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அரசாங்கத்தினாலோ அல்லது தனியார் முதலீட்டாளர்களினாலோ மேற்கொள்ள திட்டமிடப்பட்ட எவ்வித செயற்திட்டங்களையும் அமைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வட பகுதிக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வவுனியாவில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசாங்கத்தினால் இவ் ஆண்டுக்குள் முன்னொடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த சந்தர்ப்பங்களில் சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருந்து கொண்டதுடன் அதற்கு தமது ஆதரவுகளை வழங்கியுன்ளனர் எனவும் தெரிவித்தார் .

மன்னார் மாவட்டத்தில் இந்தியாவின் அதானி தனியார் நிறுவனத்தினரால் அமைக்கப்படவுள்ள காற்றலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் பொது அமைப்புக்களினால் தெரிவிக்கப்பட்ட மாற்று கருத்துக்கள் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை அமைச்சர் தெரிவித்திருந்தார் .
