யாழ். கடற்கரையில் தொடர்ந்து கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்! பீதியில் மக்கள்
#SriLanka
#Jaffna
#Point-Pedro
#Lanka4
#beach
#Boat
#Sea
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

குறிப்பாக. வடக்கிலிருந்து தெற்க்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வளமையாக இருக்கின்ற போதும். இம்முறை அதிகளவான பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் மிதப்புகள், உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரயொதுங்கியுள்ளன.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.