கண்டியில் உடற்பருமனை குறைக்க 61 வயது பெண்ணுக்கு சத்திரசிகிச்சை!
#SriLanka
#Hospital
#kandy
#Tamilnews
#sri lanka tamil news
#Surgery
#lanka4Media
Thamilini
1 year ago
உடல் பருமன் காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்த 61 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் லிபோசக்ஷன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது வயிற்றில் இருந்து 13.5 லிட்டர் கொழுப்பு அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அபாயம் இருந்த போதிலும் நோயாளியின் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.