தமிழக கடற்றொலில் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்த யாழ்.பருத்தித்துறை மீனவர்கள்
இந்திய மீனவர்களின் படகுகளால் யாழ்.பருத்தித்துறை இன்பசிட்டி மீனவர்களது வலைகள் அறுத்தழிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்நாட்டு மீனவர்களே எங்களைப் பாருங்கள், எங்களை பாதுகாக்கின்றோன் என்று நீங்களே சொல்லிக் கொண்டு எங்களை முற்று முழுதாக அளித்து கொண்டிருக்கின்றீர்கள் .
இப்படி ஒரு நிலையில் நாங்கள் எப்படி வாழ முடியும். நீங்கள் யுத்தத்தில் வாழவில்லை ஆனால் நாங்கள் யுத்தத்திலும் அழிந்து இருக்கின்றோம், நீங்களும் எங்களை அழிக்கிறீர்கள். இப்படி இருந்தால் ஒரு தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு உங்களுடைய நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் இதனைப் பார்த்து இதற்கு ஒரு நிபந்தனை விதிக்க வேண்டும்.
எங்களுடைய எல்லைக்குள் வந்து இப்படி ஒரு நிலைமையை எங்களுக்கு நீங்கள் தந்திருக்கின்றீர்கள். இப்படி இருந்தால் எங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு நாங்கள் சாப்பாடு கொடுப்பது,
இந்தப் பிரச்சினை தீர்வதற்கு தமிழக மக்களே இதற்கான ஒரு முடிவினை எடுக்க வேண்டும். இதற்கு வேறு வழிகள் இல்லை, அரசியல்வாதிகளை நம்ப முடியாது, அதே போன்று தான் அரச அதிகாரிகளையும் நம்ப முடியாது, எங்களுடைய கடற்றொழில் சமூகத்தை தமிழக கடற்றொலில் சமூகம் தான் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.