வரி இலக்கம் பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர்!

#SriLanka #Lanka4 #Ranjith Siambalapitiya #Tax #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
வரி இலக்கம் பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர்!

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் முதல் நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும்போதும், புதுப்பிக்கும்போதும் டின்இலக்கம் கட்டாயமாக்கப்படும் என்ற தீர்மானம் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

images/content-image/1705058905.jpg

ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்தத் தகுதியுடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வரி இலக்கத்தை பெற வேண்டும் எனவும், அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை அல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஏப்ரல் மாதம் முதல் நடப்புக் கணக்கு தொடங்குதல், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி கோருதல், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல் மற்றும் நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும் வரி இலக்கம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தினமும் சுமார் 25,000 பேர் வரி அடையாள இலக்கமான TNI இலக்கத்திற்காக பதிவு செய்வதாக உள்நாட்டு வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்தனா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!