மூடப்பட்டது யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்!

#SriLanka #Jaffna #Lanka4 #Zoo #Dog
Mayoorikka
1 year ago
மூடப்பட்டது யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்!

சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடாத்திவரப்பட்டது.

 இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.

 எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை பராமரிப்பதற்கு போதிய பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

 தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் திறக்கப்படும் அதுவரை நாய்களை அங்கு விடவேண்டாம் என அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!