ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி! பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4 #Britain
Mayoorikka
1 year ago
ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி! பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne,) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.

 அதன் பின்னர் இளவரசி ஆனி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

 பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது. 3 நாள் விஜயமாக புதன்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

 முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

images/content-image/2023/01/1704952170.jpg

 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோர் வரவேற்றனர். இதேவேளை, கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் விஜயம் செய்தனர்.

 இலங்கையில் பிரித்தானிய இளவரசி தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

 இதேவேளை, இலங்கையில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக கொழும்பில் உள்ள சேவ் தி சில்ட்ரன் அலுவலக ஊழியர்களை இளவரசி ஆன் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளை கேட்டு அறிந்துகொண்டார்.

 மேலும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசி ஆன், சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். 

அத்துடன் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்கும் சமூக-உணர்ச்சி கற்றல் கருவித்தொகுப்பான 'தில்லி' திட்டத்தின் அமர்வையும் அவதானித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!