முட்டை விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Egg
PriyaRam
2 years ago
6 மில்லியன் முட்டைகள் இன்றும் நாளையும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள முட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமையினாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் சதொச விற்பனை நிலையங்களினூடாக முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.