இவ்வருடத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்!
இலங்கையில் இவ்வருடம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான பல்துறை தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு செயலமர்வில் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் டாக்டர் நெதாஞ்சலி மபிடிகம கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல பெண்கள் கர்ப்ப காலத்தில் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, தலதா அத்துகோரள ஆகியோர், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு புதிய திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.