கிளிநொச்சியில் உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் மீன்குஞ்சுகள் இடும் நிகழ்வு!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று (03.12) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கே மேற்படி 50000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து மீன் குஞ்சுகளை வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது கடந்த மாதம் 19.11.2023ம் திகதி ஆரம்பமானது.