சீனியின் விலையை 280 ரூபாவிற்கு மேற்படாமல் விநியோகிக்க வேண்டும் : டக்ளஸ் வலியுறுத்தல்!
280 ரூபாவிற்கு மேற்படாமல் மக்களுக்கு சீனி விநியோகிக்க வேண்டும் எனவும் தை பொங்கலின் பின்னர் நாகப்பட்டனத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவையுடன் சரக்கு கப்பலும் வரும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சீனி தட்டுப்பாடு வடக்கில் நிலவுவதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சருடன் பேசி வடக்கு மாகாணத்துக்கு 100 மெற்றிக் தொன் சீனி சதோச ஊடாக சங்கங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனியானது 269 ரூபாவிற்கு கிடைப்பதாகவும், ஏற்றுமதி செலவு உள்ளடக்க விலை தீர்மானிக்க வேண்டிய நிலையில், வெளியில் 320 ரூபா வரை விற்பனையாகிறது எனவும் கூட்டுறவாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் சீனியை 280 ரூபாவிற்கு மேற்படாது விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கு மேலதிகமாக விற்பனை இடம்பெறாத வகையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், தைப் பொங்கலின் பின்னர் நாகப்பட்டணத்திலிருந்து சரக்கு கப்பல் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன் போது சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும், தட்டுப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும் என்றும் கால்வாய் ஆழம் போதாது என்றார்கள். அது ஆழப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது காற்று அதிகரித்துள்ளது. அதனால் தற்காலிகமாக சேவை இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.