பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் நால்வர் பலி
#Death
#Hospital
#world_news
#Phillipines
#Rescue
#Blast
#Church
Prasu
2 years ago
பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU) உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலை இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தில் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில், நகரம் இஸ்லாமிய போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே ஐந்து மாத மோதல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.